துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை
துதிகளின் பாத்திரரை
வானங்கள் கொள்ளாத தேவனை
வையகம் தனிலே போற்றுவேன்
அல்லேலூயா ... அல்லேலூயா
அல்லேலூயா ... பாடித்துதிப்பேன் (2)
1. உயரமும் உன்னதமாம்
சிங்காசனத்தினிலே
வீற்றிருக்கும் நீரே
உன்னதர் உன்னதரே
2. மாட்சிமை நிறைந்தவரே
மகிமையின் தேவன் நீரே
சேனைகளின் தேவன் நீரே
பரிசுத்தர் பரிசுத்தரே
3. யேகோவா தேவன் நீரே
என்றென்றும் வாழ்பவரே
யேகோவா நிசி நீரே - என்
வெற்றி கொடி நீரே
HOME
More Songs
No comments:
Post a Comment